ரூ 100 கோடியில் மும்பையில் வீடு: ஹிரித்திக் ரோஷனின் மிரள வைக்கும் ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்பு
தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷனின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
ஹிரித்திக் ரோஷன்
இந்தி திரைப்பட உலகில் கான் நடிகர்களுக்கு அடுத்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஹிரித்திக் ரோஷன்.

க்ரிஷ், தூம்-2 போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிய ஹிரித்திக், வார் படத்தின் மூலம் வசூல் நாயகனாக மாறினார்.
இந்த நிலையில், தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.
ஆடம்பர வீடு
ஹிரித்திக்கிற்கு மும்பையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர வீடு உள்ளது. 38,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டில் இருந்து, அரபிக்கடலில் பிரமிக்க வைக்கும் காட்சியை பார்க்கலாம்.

அதேபோல் லோனாவாலா பண்ணை வீடும் ஹிரித்திக்கிற்கு சொந்தமாக உள்ளது. இதன் மதிப்பு ரூ.33 கோடி என்று கூறப்படுகிறது.

ஆடை பிராண்ட்
HRX என்ற ஆடை பிராண்ட் மூலம் ஹிரித்திக் fashion உலகில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார்.
இந்த Athleisure வகை பிராண்ட் 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து முக்கிய மின் வணிக தளங்களிலும் இந்த பிராண்ட் கிடைக்கிறது. இதன் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நியூஸ்18 அறிக்கையின்படி தெரிய வருகிறது.
ஹிரித்திக் ரோஷன், எந்தவொரு பிரபலமும் இதுவரை செய்துள்ள மிகப்பெரிய விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அது 100 கோடி ரூபாய் மதிப்பிலான CureFit என்ற சுகாதார மற்றும் உடற்பயிற்சி பிராண்ட் ஆகும்.

வருமான ஆதாரங்கள்
திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் முக்கிய வருமானத்தை ஹிரித்திக் ரோஷன் பெறுகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான 'வார் 2' படத்திற்கு ஹிரித்திக் ரூ.48 கோடி ஊதியம் பெற்றதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
49.5 மில்லியன் Followersஐ கொண்டிருக்கும் ஹிரித்திக், ஒரு விளம்பரப் பதிவிற்கு சுமார் 4-5 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார். ஹிரித்திக்கின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3,100 கோடி என்று மதிப்பிடப்படுகிறது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |