பிரித்தானியாவில் ஆரம்ப பள்ளியில் பயங்கர தீ விபத்து: மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
பிரித்தானியாவின் ஆரம்ப பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது.
மாணவர்கள் அனைவரும் பத்திரமாக அருகில் உள்ள பூங்காவிற்கு மாற்றம்.
பிரித்தானியாவில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
தென்மேற்கு வேல்ஸின் டென்பியில்(Tenby) உள்ள மனோர்பியர் ஆரம்ப பள்ளியில்(Manorbier Primary School) இன்று திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை உடனடியாக உணர்ந்து கொண்ட பள்ளியின் ஆசிரியர்கள் துரிதமாக செயல்பட்டு மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அருகிலுள்ள ரைட் வே மேனர் பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
Image: Martin Cavaney/Athena Pictures
பள்ளியின் மேற்கூரையில் பற்றிய தீயினை கவனித்த அருகில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்கள், உடனடியாக எச்சரிக்கை அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
பள்ளியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவரும் புகைப்படங்கள் மூலம், பள்ளி முழுவதும் தீ பரவி இருப்பதையும் இந்த தீ விபத்தில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்ததாகவும், கூரையைச் சுற்றி சில சாரக்கட்டுகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image: Martin Cavaney/Athena Pictures
விபத்து தொடர்பாக கவுன்சில் செய்தி தொடர்பாளர் பேசிய போது, வேல்ஸ் விசி பள்ளியில் உள்ள மனோர்பியர் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பெம்ப்ரோக்ஷயர் கவுண்டி கவுன்சில் அறிந்திருக்கிறது, மேலும் அனைத்து குழந்தைகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து இருப்பதாக தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு; கண்ணிவெடிகளை மிதித்த ரஷ்ய ராணுவ வீரர்கள்: அடுத்த நொடி அரங்கேறிய பயங்கரம்! வீடியோ ஆதாரம்
பள்ளிக்கான வழக்கமான பாதை தற்போது மூடப்பட்டிருப்பதால், நார்ச்சர்ட் லேன் வழியைப் பயன்படுத்தி, புட்டி லேண்ட் கேரவன் பூங்காவிலிருந்து குழந்தைகளை அழைத்து செல்லுமாறு பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Image: Martin Cavaney/Athena Pictures