மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில்... பிரித்தானியர் மீது உக்ரைன் அழகி சரமாரி குற்றச்சாட்டுகள்
தன்னைக் கைவிட்ட பிரித்தானியர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் உக்ரைன் அழகி.
உக்ரைனிய பெண்கள் வலிமையானவர்கள், புடினாலும் எங்களை அழிக்க முடியாது டோனியாலும் என்னை அழிக்க முடியாது என்கிறார் அவர்.
எல்லா பிரச்சினைகளுக்கும் அவர்தான் காரணம் என தன்னைக் கைவிட்ட பிரித்தானியர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அவரால் துரத்தி விடப்பட்ட உக்ரைன் அழகி.
ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு ஓடி வந்தார் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண்ணுக்கு, Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29), அவரது மனைவியான லோர்னா (Lorna) தம்பதி தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
Credit: NB PRESS LTD
ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் பத்தே நாட்களில் காதல் பற்றிக்கொள்ள, லோர்னா தட்டிக்கேட்க, இதுதான் வாய்ப்பு என மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.
ஆனால், டோனி சோபியா காதல் நான்கு மாதங்கள் கூட நீடிக்கவில்லை.
இப்போது புதுக்காதலி சோபியாவையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டார் டோனி. தன் பிறந்தநாளின்போது கத்தியால் சுவரில் ஓங்கி ஓங்கி குத்தியதால் தான் பயந்துபோனதாகக் கூறி பொலிசாரை அழைத்தார் டோனி.
Credit: NB PRESS LTD
அப்போதும், பிறகு வீட்டுக்கு வெளியே குப்பை போடும் கவர்களில் வைக்கப்பட்டிருந்த தன் உடைமைகளை எடுக்கச் செல்லும்போதும் என இரண்டு முறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் சோபியா.
இந்நிலையில், டோனி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் சோபியா.
தனக்கு டோனி லோர்னா தம்பதியர் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்து இரண்டு நாட்களே ஆன நிலையில், டோனி தன்னிடம் நெருங்கிப் பழகத் துவங்கியதாக தெரிவித்துள்ளார் சோபியா.
தாங்கள் அப்போது பாலுறவு கொள்ளவில்லை என்றும், ஆனால், தானும் டோனியும் மட்டும் தனியாக வீட்டில் இருக்கும்போது, டோனி தன் கைகளைப் பிடித்துக்கொள்வார் என்றும், தன்னைக் கட்டிப்பிடித்துக்கொள்வார் என்றும் கூறியுள்ளார் சோபியா.
Credit: NB PRESS LTD
அத்துடன், எல்லா தவறுகளையும் செய்தது டோனிதான், அவர் ஒரு பொய்யர், நான் லோர்னாவை டோனியை விட்டுப் பிரிக்கவில்லை. நான் வரும் முன்பே இருவருக்கும் இடையிலான உறவு முடிந்துவிட்டிருந்தது என்று கூறும் சோபியா, தாங்கள் தனியாக வந்த பிறகு, தன்னை டோனி ஒரு எடுபிடி போலத்தான் நடத்தினார் என்கிறார்.
வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டு ஒன்லைன் சூதாட்டத்தில் டோனி பணத்தை இழந்ததைப் பார்த்தேன் என்று கூறும் சோபியா, தான் தன் பணத்தில் உணவு முதல் எல்லா செலவுகளையும் கவனித்துக்கொண்டதுடன், டோனிக்கு சமைத்தும் துவைத்தும் போட்டேன் என்கிறார்.
தான் டோனியை உண்மையாகக் காதலித்ததாகவும், திருமணம், பிள்ளைகள் என எதிர்காலம் குறித்து கனவுகள் வைத்திருந்ததாகவும், டோனி தன்னை ஏமாற்றிவிட்டதால் தான் மனமுடைந்து போனதாகவும் தெரிவிக்கும் சோபியா, உக்ரைனிய பெண்கள் வலிமையானவர்கள், புடினாலும் எங்களை அழிக்க முடியாது டோனியாலும் என்னை அழிக்க முடியாது என்கிறார்.
Credit: Enterprise