பிரபல நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை! இருவர் கைது..அதிர்ச்சி காரணம்
பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷியின் உறவுமுறை சகோதரர், வாகன நிறுத்த தகராறில் கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹூமா குரேஷியின் சகோதரர்
தமிழில் காலா, வலிமை ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் ஹூமா குரேஷி (Huma Qureshi). இவர் இந்தியில் பிரபலமான நடிகை ஆவார்.

11 ஆண்டுகளுக்கு முன்பு சமையல்கார பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களாவை எழுதி வைத்த என்ஜினியர்.., நெகிழ்ச்சி சம்பவம்
இவரது உறவுமுறை சகோதாரர் ஆசிப் குரேஷி என்பவர் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமையன்று இரவு தனது வீட்டிற்கு வெளியே வாகன நிறுத்தியது தொடர்பாக, இளைஞர்கள் இருவருடன் ஆசிப் குரேஷி வாக்குவாதம் செய்துள்ளார்.
இளைஞர்கள் கைது
அப்போது அவர்கள் ஆசிப் குரேஷியை கூர்மையான ஆயுதத்தால் குத்தியுள்ளனர். இதில் நிலைதடுமாறி விழுந்த அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் உஜ்வால் (19) மற்றும் கௌதம் (18) ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் ஆசிப்பின் மார்பில் தாக்கியதன் விளைவாக அவர் இறந்ததாக, அறிக்கை ஒன்றில் துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |