வயலில் கண்டெடுக்கப்பட்ட மனித உடல்: மூவரை கைது செய்த ஸ்காட்லாந்து பொலிஸார்
பிரித்தானியாவில் வயல்வெளியில் மனித உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித உடல் கண்டுபிடிப்பு
இன்வெர்கிளைட் பகுதியில் வயல்வெளியில் மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்காட்லாந்து பொலிஸார் 3 நபர்களை கைது செய்து இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
கிமாகோலம்(Kilmacolm) பகுதியில் உள்ள ஹை மாதர்னாக் பண்ணைக்கு அருகில் உள்ள வயல் பரப்பில் இருந்து இறந்தவரின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட மனித உடல் தொடர்பான அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், க்ரீனாக்(Greenock) பகுதியில் செவ்வாய்க்கிழமை காணாமல் போன 50 வயது நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து பொலிஸார் 51, 45 மற்றும் 44 வயதுடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட நிகழ்விற்கு முன்னதாக நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |