அமெரிக்க நகரம் ஒன்றில் இரு இடங்களில் சிதறிக் கிடந்த மனித உடல் பாகங்கள்: பொலிசார் தீவிர விசாரணை
அரிசோனாவில் இரு இடங்களில் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை ஓரிடத்தில் சில உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவை மனித உடல் பாகங்கள்தான் என்பதை தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்தனர்.
பொலிசார் உடனடியாக அப்பகுதியை கட்டுபாட்டுக்குள் எடுத்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரிசோனாவின் மற்றொரு பகுதியில் சில உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொலிசார், கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் விரைவில் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாக தெரிவித்தனர்.
ஆனால், Yavapai என்ற பகுதியைச் சேர்ந்த மருத்துவரான Dr Jeffrey Nine, அந்த உடல் பாகங்கள் அனைத்தும் மருத்துவக்கல்லூரி ஒன்றில் மாணவர்கள் படிப்பதற்காக பயன்படுத்தப்படும் உடல் பாகங்கள் போல் தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
அப்படி இருந்தாலும், உடல் பாகங்களை அவமதிப்பதும் பெரும் குற்றம் என்பதால், அதற்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தருமாறு அவர் பொலிசாரை கோரியுள்ளார்.
