டிக் டாக்கில் மனித எலும்பு கூடுகளை வைத்து இளைஞர் செய்யும் அதிர்ச்சி செயல்! திகிலூட்டும் வீடியோ
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் மனித எலும்பு கூடுகளை டிக் டாக்கில் விற்பனை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் தங்களது வித்தியாசமான திறமைகளை டிக் டாக் போன்ற ஆப்பில் வீடியோ மூலம் வெளியிட்டு வருகின்றனர். இந்த செயலியில் நடனம், பாட்டு போன்ற சம்மந்தமான வீடியோவை பார்த்து இருப்போம்.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் டிக் டாக்கில் மனித எலும்புகளை வைத்து வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். நியூயார்க் நகரில் வசித்து வருபவர் ஜான் பிச்சாயா பெர்ரி(21). இவர் மனித எலும்புகளை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அவரது வீட்டிலேயே மண்டை ஓடு, கை, கால், பச்சிளம் குழந்தை எலும்புகள் போன்ற எல்லாவிதமான எலும்புகளையும் அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் இந்த எலும்புகளை டிக் டாக்கில் காண்பித்து விற்பனை செய்கிறார்.
ஒவ்வொரு எலும்பையும் காட்டி அதன் அறிவியல்பூர்வ தகவல்களை சொல்கிறார். பிறகு அதற்கான விலையையும் குறிப்பிடுகிறார். இவரை 5 லட்சம் பேர் டிக் டாக்கில் பின் தொடர்கின்றனர்.
Please stop asking about my human bone collection. It is totally legal pic.twitter.com/LQjCDw0KoW
— Spooky Alex Peter ? (@LolOverruled) August 12, 2021
சிலர் இவரது வீடியோவை பார்த்து இது போன்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது நியாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பெர்ரி, என்னிடம் எலும்புகளை வாங்குபவர்கள் பெரும்பாலும் மருத்துவர்கள், எலும்பியல் நிபுணர்கள் போன்றவர்கள் தான் உள்ளனர்.
அவர்கள் மருத்துவ ஆய்வு மற்றும் மாணவர்களுக்கு மருத்துவ பாடம் கற்பிக்க என்னிடம் எலும்புகளை வாங்கி செல்கின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.