பெட்ரோல் நிலையத்தில் கிடந்த 'ஆண் குறி'! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்.. பின்னர் தெரிய வந்த உண்மை
அமெரிக்காவில் பெட்ரோல் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட ஆண்குறி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஊழியர்கள் அதிர்ச்சி
அலபாமா மாகாணத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்திற்கு வெளியே, துண்டிக்கப்பட்ட ஆண்குறி தரையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். இது கொலையா அல்லது தாக்குதல் சம்பவம் என்பது முதலில் தெரியவில்லை.
@Orit Ben-Ezzer/Zuma Wire/REX/Shutterstock
எனினும், பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவருடையதாக அது இருக்கலாம் என பொலிஸார் நம்பினர்.
சிசிடிவி காட்சிகள்
அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அதிர்ச்சிகரமாக, கறுப்பு நிற டிரக் ஒன்று பெட்ரோலுக்காக வந்ததையும், அது நகர்ந்தவுடன் ஆண்குறி தரையில் விழுந்ததும் தெரிய வந்தது.
@Getty Images
அதன் பின்னர் பொலிஸார் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அந்த ஆண்குறி கிறிஸ்டோபர் மீன்ஸ் (29) என்பவருடையது என தெரிய வந்தது.
இருசக்கர வாகனத்தில் பயணித்த அந்த இளைஞர், பல கார்கள் மோதியதால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர். அதனையடுத்து இதுதொடர்பாக விவரம் அறிந்தவர்கள் சம்பவம் குறித்த தகவல்களை அளிக்க பொலிஸாரை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.