வியட்நாம் எல்லைக்கு மனித ரோபோக்களை அனுப்பும் சீனா: பின்னணியில் உள்ள காரணங்கள்
எல்லையில் ரோந்து பணிகளுக்கு மனித ரோபோக்களை பயன்படுத்த சீனா முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
37 மில்லியன் டொலர் ஒப்பந்தம்
சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் உள்ள யுபிடெக் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம், சந்தைக்கு தேவையான தொழிற்சாலை மற்றும் மனித பொது சேவை ரோபோக்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சீன அரசு இந்த நிறுவனத்திடம் ரோந்து பணிகளை மேற்கொள்ள கூடிய “வாக்கர்ஸ் எஸ்2 என்ற புதிய மனித ரோபோக்களை சுமார் 37 மில்லியன் டொலருக்கு வாங்க ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்களையும் உருவாக்க யுபிடெக் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்திடம் சீன அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
எல்லை ரோந்து பணிகளில் ரோபோக்கள்
இந்நிலையில் வியட்நாம் எல்லையில் குவாங்சி பகுதியில் உள்ள ஃபேங்செங்காங் என்ற கடலோர பகுதியில் ரோந்து பணிகளை நடத்த சீனா இந்த ரேபோக்களை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரோபோக்கள், மனிதர்களை வரிசையாக நிற்க வைக்கவும், வாகனங்களை சரியான ஒழுங்குபடுத்தவும் எல்லை பணியாளர்களுக்கு உதவிகரமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சரக்கு முனையத்தில் தொழிலாளர்களுக்கு உதவுவது, கன்டெய்னர்களின் ஐ.டிக்களை சரிபார்ப்பது மற்றும் சீல்களை உறுதி செய்வது போன்ற பணிகளும் இந்த மனித ரோபோக்கள் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரோபோக்கள் ரயில் நிலையங்கள் மற்றும் விமான சேவைகளிலும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |