பயணியின் சூட்கேசுக்குள் எலும்புக்கூடு: விமான நிலையத்தில் பரபரப்பு
இந்திய தலைநகர் புதுடெல்லியில், விமானப்பயணி ஒருவரின் சூட்கேசுக்குள் எலும்பு ஒன்று இருந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பயணியின் சூட்கேசுக்குள் எலும்புக்கூடு
இந்திய தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமானப்பயணி ஒருவரின் சூட்கேசுக்குள் எலும்பு ஒன்று இருப்பது தெரியவந்தது.

உடனடியாக பொலிசார் அந்த சூட்கேஸ் யாருடையது என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
விசாரணையில், அது ஒரு மருத்துவ மாணவரின் சூட்கேஸ் என்பதும், அந்த எலும்புக்கூடு மனித எலும்புக்கூடு அல்ல, அது மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக பயன்படுத்தப்படும் செயற்கை எலும்புக்கூடு என்பது தெரியவந்தது.
என்றாலும், அதை உறுதி செய்துகொள்வதற்காக அதிகாரிகள் அந்த எலும்பை தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |