சாலையில் ஓடிய மனித உருவ ரோபோ: துபாயில் ஆச்சரியம்! வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், துபாயில் மனித உருவ ரோபோ ஒன்று சாலையைக் கடப்பது காட்டப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் டவர் அருகே உள்ள சாலையில் வேகமாகச் செல்லும் ஒரு காருக்கு முன்னால் இந்த ரோபோ மிதமான வேகத்தில் ஓடி சாலையைக் கடக்கிறது. காரில் பயணி ஒருவர் ஆச்சரியத்துடன் இதைப் படம் பிடிக்கிறார்.
The scenes coming out of Dubai...
— Rohan Paul (@rohanpaul_ai) August 2, 2025
We’re getting close to a future where this will become standard pic.twitter.com/u7dv2GISWk
சாலையைக் கடந்ததும், ரோபோ உடனடியாக நின்று திரும்பி, நடைபாதையில் நடக்கத் தொடங்குகிறது.
ரோபோவின் பின்னால் அதன் உரிமையாளர் ஒரு ரிமோட் கண்ட்ரோலைக் கொண்டு அதை இயக்குவது தெரிகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படுவதால், அந்த ரோபோ மனிதனைவிட வேகமாக நடக்கிறது.
இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. ரோபோக்கள் மனிதர்களுடன் இணைந்து வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை எனப் பலரும் இந்த வீடியோவைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |