மும்பை கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலம்: மீட்க போராடிய மக்களின் முயற்சி வீண்
மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலக் குட்டி தீவிர மீட்பு முயற்சிகளுக்கு பிறகும் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரை ஒதுங்கிய திமிங்கலம்
கடந்த சனிக்கிழமை மும்பையின் பாந்த்ரா கடற்கரை பகுதியில் 26 அடி நீளமுள்ள ஹம்பேக் திமிங்கலக்(Humpback) குட்டி கரை ஒதுங்கியது,.
கரை ஒதுங்கிய திமிங்கலம் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்த பாந்த்ரா - வெர்சோவா கடல்வழித் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதை உடனடியாக மீட்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

மீட்பு முயற்சியில் வனத்துறையின் சதுப்புநிலப் பிரிவு, மும்பை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் என பலர் திரண்டு வந்து திமிங்கலத்தை மீட்டு ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பாக விட முயற்சி செய்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக திமிங்கலத்தின் உடல்நிலை மோசமடைந்து அசைவுகளை நிறுத்தியதால், அது உயிரிழந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
A 26-foot baby humpback whale that washed ashore on Mumbai's rocky Bandra coastline died despite a multi-agency rescue effort, officials said.
— NDTV (@ndtv) June 29, 2026
The whale calf was first spotted near Carter Club on Saturday morning by workers engaged in the Bandra-Versova Sea Link project after it… pic.twitter.com/TyGYEUfALj
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, முறையான பரிசோதனைகள் மற்றும் வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு திமிங்கலத்தை அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமிங்கலம் தரைத்தட்டுவதற்கான காரணங்கள்
ஹம்பேக் திமிங்கலம் பொதுவாக வளர்ந்த நிலையில் 50 முதல் 60 அடி நீளம் வரை வளரக்கூடியது.
இந்த திமிங்கலங்கள் உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக பல கிலோ மீட்டர் வலசை போகும் தன்மை கொண்டது.
அந்த வகையில் அரபிக் கடலானது ஹம்பேக் திமிங்கலங்களின் முக்கியமான வலசைப் பாதையாக உள்ளது.
இருப்பினும் திமிங்கலங்கள் கரை தட்டுவது என்பது மும்பை கடற்கரையில் அரிதாகவே நடைபெறுகிறது. ஆனால் சில சமயங்கள் தாயிடம் இருந்து பிரிந்த குட்டி திமிங்கலங்கள், திடீர் உடல்நலக் குறைபாடு அல்லது காயத்தால் பாதிக்கப்பட்ட திமிங்கலங்கள், நீருக்கடியில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் ஆகியவை திமிங்கலங்களை திசை மாறச் செய்து சிக்கலில் மாட்டி விடுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |