பிரான்ஸ் அருங்காட்சியகத்துக்கு மீண்டும் ஒரு இழப்பு
பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அருங்காட்சியகத்துக்கு மீண்டும் ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் அருங்காட்சியகத்துக்கு மீண்டும் ஒரு இழப்பு
சில வாரங்களுக்கு முன்புதான் பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்நிலையில், Louvre அருங்காட்சியகத்துக்கு மீண்டும் ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம், அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவால் 300 முதல் 400 கலைப்பொருட்கள் சேதமடைந்துள்ளதாக அருங்காட்சியக இணை நிர்வாகியான ஃப்ரான்சிஸ் (Francis Steinbock) தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும், புத்தகங்களே சேதமடைந்துள்ளதாகவும், சேதமடைந்த புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுவருவதாகவும் ஃப்ரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |