288 பேர் பயணித்த கப்பலில் தீ.... நடுக்கடலில் உயிர் பயத்தில் உறைந்த பயணிகள்!
கிரீஸில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த கப்பல், நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு கிரீஸின் மிகப்பெரிய துறைமுகமான Igoumenitsa-வில் இருந்து புறப்பட்டு இத்தாலிய துறைமுகமான பிரிண்டிசிக்கு சென்ற Euroferry Olympia கப்பலிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 237 பயணிகள் மற்றும் 51 குழுவினர் இருந்ததாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
அயோனியன் கடலில் உள்ள கோர்பு தீவு அருகே பணித்துக்கொண்டிருந்த போது Euroferry Olympia தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தற்போது வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் மூன்று கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஒரு இத்தாலிய பொலிஸ் கப்பல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மீட்கப்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் கோர்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"В Греческом зале"
— Жизнь в Резервации (@CleanAuthoritie) February 18, 2022
В Ионическом море выгорел паром "Euroferry Olympia", который следовал из Игуменицы в Бриндизи.
288 чел, которые находились на борту, успели эвакуировать на другие лайнеры и суда береговой охраныpic.twitter.com/zJ1IpxGDHP
தற்போது வரை உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்து அதிகாரிகள் தகவல் ஏதும் வெளியிடவில்லை.