அழுகிய நிலையில் 500 சடலங்கள்: பல்கலைக்கழக மொட்டைமாடியில் திகிலூட்டிய காட்சி., தொடங்கிய விசாரணை
பாகிஸ்தானில் பல்கலைக்கழக மருத்துவமனையின் கூரையில் நூற்றுக்கணக்கான அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த திகிலூட்டும் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் குறித்து விசாரிக்க வெள்ளிக்கிழமை பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அழுகிய நிலையில் கிடந்த உடல்கள் அனைத்தும் கைவிடப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத சடலங்கள் என கூறப்படுகிறது.
500-க்கும் மேற்பட்ட சடலங்கள் என கூறப்படும், இந்த திகிலூட்டும் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிதைந்த உடல்கள் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் தளத்தில் தரையிலும் பழைய மரக் கட்டில் மீதும் வீசப்பட்டு கிடந்தன.
சில உடல்கள் கடுமையாக சிதைந்து, கழுகுகள் கொத்தப்பட்டு கிடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்
இந்நிலையில், பஞ்சாப் அரசு ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது, அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். புகைப்படங்களை காண இங்கே கிளிக் செய்யவும்
பஞ்சாப் முதல்வர் சவுத்ரி பர்வேஸ் இலாஹி இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு, சிறப்பு சுகாதார மற்றும் மருத்துவக் கல்வித் துறைக்கான மாகாண செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.
இறந்தவர்களின் உடல்களை கூரையின் மேல் வீசி மனிதாபிமானமற்ற செயல் செய்யப்பட்டுள்ளது என்று கூறிய பஞ்சாப் முதல்வர், இதற்கு காரணமான ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
An official inquiry has been launched. Pls read initial reply:
— Moonis Elahi (@MoonisElahi6) October 14, 2022
Respected Sir,
These are the unknown dead bodies handed over by the police to Nishtar Medical university Multan for post mortem and if required to be used for teaching purpose for MBBS students. https://t.co/NhGFYWsGYj