விபத்துக்குள்ளான ஹங்கேரி நாட்டு போர் விமானம்: நொடி பொழுதில் உயிர் தப்பிய விமானி
Hungarian Gripen Fighter Flight Crashed: ஹங்கேரி நாட்டு ராணுவத்தின் போர் விமான விபத்துக்குள்ளான சம்பவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான போர் விமானம்
ஹங்கேரி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சோல்னோக்(Szolnok) நகருக்கு அருகே அந்நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு சொந்த்மான போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிரிப்பென்(Gripen) ரக போர் விமானமானது விபத்துக்குள்ளாகி இருப்பதை அந்நாட்டு பிரதமர் பீட்டர் மக்யார்(Péter Magyar) திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில், போர் விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்து தொடர்பாக உடனடி அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் பீட்டர் மக்யார் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் தப்பிய விமானி
அதிர்ஷ்டவசமாக உரிய நேரத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து விமானி எஜெக்ட் செய்து வெளியேறி விட்டதாகவும், அவருக்கு எந்தவொரு காயமும் இன்றி உயிர் பிழைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்தினால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ரோமுலஸ் ருசின் ஸெண்டி உடனடியாக விரைந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |