10 இராஜதந்திரிகளை வெளியேற்றிய நாடு: பதிலடி கொடுப்போம்..ரஷ்யா சூளுரை
Hungary expels 10 russian diplomats: ஐரோப்பிய நாடான ஹங்கேரி 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது.
ஹங்கேரி ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடுகள் காரணமாக 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது.
வியன்னா உடன்படிக்கையின் கீழ்
ஹங்கேரியின் புதிய பிரதமராக பீட்டர் மக்யார் கடந்த மே மாதம் பதவியேற்றார். அதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைனுடனான உறவுகளை சீரமைக்க முயன்று வருகிறார்.
இந்த சூழலில், செவ்வாய்க்கிழமை அன்று தங்கள் இராஜதந்திர அந்தஸ்துக்கு பொருந்தாத வகையில் செயல்பட்டதாகக் கூறி, 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது.
ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் அனிடா ஓர்பன் (Anita Orban) வெளியிட்ட மின்னஞ்சல் அறிக்கையில், "வெளியேற்றப்பட்டனர் வியன்னா உடன்படிக்கையின் கீழ் இராஜதந்திரிகளுக்கு ஏற்புடையதல்லாத செயல்பாடுகளில் ஹங்கேரியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்வதைக் குறிக்கவில்லை" என தெரிவித்தார்.
பதிலடி கொடுப்போம்
தூதரக ஊழியர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிடாத ஓர்பன், 'பரஸ்பர மரியாதை மற்றும் விதிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான பேச்சுவார்த்தையை ஹங்கேரி தொடர விரும்புகிறது' என்றார்.
இதனைத் தொடர்ந்து, ஹங்கேரியின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரிய ஜகரோவா (Maira Zakharova) ஊடக நிறுவனத்திடம், "புடாபெஸ்டில் உள்ள ரஷ்ய-எதிர்ப்புத் தரப்பினருக்கான பதில் கடுமையானதாகவும், வேதனையானதாகவும் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |