2000 எனர்ஜி பானங்களின் போத்தல்கள்., கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்த ஹங்கேரி இளைஞர்
Hungary man Collects 2000 Energy cans and sets Guinness: ஹங்கேரி நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் 2000 எனர்ஜி பானங்களின் போத்தல்களை சேகரித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
2008ம் ஆண்டு தொடங்கிய பயணம்
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கெர்கோ போர்பேலி என்ற நபர், 2008ம் ஆண்டு வெயிலின் தாக்கம் காரணமாக ஹெல் என்ற எனர்ஜி பானம் ஒன்றை வாங்கி குடித்துள்ளார். எனர்ஜி பானங்களை அதுவரை குடித்திராத கெர்கோ, அதன் சுவை பிடித்து போகவே பல்வேறு பிற பானங்களையும் வாங்கி குடிக்க தொடங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் எனர்ஜி பானங்களின் போத்தல்களை குப்பையில் போடவே திட்டமிட்ட கெர்கோ, பின்னர் அதனை தன்னுடைய வீட்டின் அலமாரியை அழகுப்படுத்த பயன்படுத்தியுள்ளார்.
இப்படியே 2000 போத்தல்களை வரை சேகரித்த கெர்கோ, இதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மிகவும் போராடியுள்ளார்.
இந்த முழு போத்தல்களின் சந்தை மதிப்பு சுமார் 10,000 முதல் 35,000 யூரோக்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை
2025ம் ஆண்டு வீட்டை புதுப்பிக்க திட்டமிட்ட கெர்கோ, அப்போது “தன்னிடம் தான் உலகத்திலேயே அதிக எனர்ஜி பானங்களின் போத்தல்கள் இருக்குமோ? என சிந்தித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மகள் என்றைக்காவது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை படிக்கும் போது, அதில் தன்னுடைய தந்தையின் புகைப்படம் இருப்பதை பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளார்.
இதையடுத்து அந்த போத்தல்களை பல மணி நேர செலவீனத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியின் உதவியுடன் ஆவணப்படுத்தியுள்ளார்.
இறுதியில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு உலகில் மிகப்பெரிய எனர்ஜி பானங்களின் போத்தல்கள் சேகரிப்பிற்கான சாதனையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும் இதை பொதுமக்கள் பார்வையிடம் வகையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிட்டு வருவதாக கெர்கோ தனது புதிய கனவை வெளிப்படுத்தியுள்ளார்.