ரஷ்யாவை தொடர்ந்து.... உக்ரைன் பகுதிகளை குறிவைக்கும் இன்னொரு நாடு: வெளியான புதிய வரைபடம்
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் அணிந்திருந்த கழுத்துத்துண்டில் உக்ரைன் நாட்டின் சில பிராந்தியங்களின் வரைபடமும் காணப்பட்ட நிலையில், விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனிய பகுதிகள்
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கால்பந்து போட்டி ஒன்றை காண சென்றிருந்த நிலையில் அணிந்திருந்த கழுத்துத்துண்டில் உக்ரேனிய பகுதிகள் உட்பட ஹங்கேரி வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உக்ரேனுக்கான ஹங்கேரி தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் ஹங்கேரி என குறிக்கப்பட்டுள்ள வரைபடம் ஒன்று அந்த கழுத்துத் துண்டில் காணப்பட்டுள்ளது.
இதில் உக்ரைன் மட்டுமின்றி, அண்டை நாடுகளான ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ருமேனியா, குரோஷியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைப்பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரி மோதல்
உக்ரேனிய பிரதேசத்தில் ஹங்கேரிய உரிமைகோரல்கள் ஏதேனும் இருந்தால் அது தொடர்பில் மன்னிப்பு கோரவும் மறுதலிக்கவும் உக்ரைன் கேட்டுகொண்டுள்ளது. சமீப ஆண்டுகளாகவே உக்ரைன் பிராந்தியம் தொடர்பில் ஹங்கேரி மோதல் போக்கையே முன்னெடுத்து வருகிறது.
ஹங்கேரியின் பூர்வகுடி மக்கள் உக்ரேனில் வசிப்பதாகவும், அந்த பகுதிகள் தங்களுக்கு உரிமையானது எனவும் ஹங்கேரி கூறி வருகிறது. மேலும், 2017ல் உக்ரைன் சட்டம் இயற்றும் வரையில், பூர்வகுடி மக்கள் ஹங்கேரி மொழியையே பயன்படுத்தி வந்ததாகவும் கூறுகின்றனர்.
@balkanscat
2020ல் ஹங்கேரி தேசியவாதிகள் விரும்பும் கிரேட்டர் ஹங்கேரி என்ற சொல்லாடலுடன், வரைபடம் ஒன்றையும் விக்டர் ஓர்பன் வெளியிட்டிருந்தார்.
கிரேட்டர் ஹங்கேரியின் வரைபடத்தில் நவீன செர்பியா, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவின் பெரும் பகுதிகளும், குரோஷியாவின் வடக்குப் பகுதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.