ரஷ்ய எரிசக்தி மீதான தடையில் இருந்து விலக்கு கோரும் ஹங்கேரி: உச்சி மாநாட்டை நடத்த முன்முயற்சி
ரஷ்யா மீதான எரிசக்தி தடையில் இருந்து ஹங்கேரி விலக்கு பெற தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலக்கு கோரும் ஹங்கேரி
ரஷ்யாவின் எரிசக்தி துறை மீது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், இந்த தடைகளில் இருந்து விலக்கு பெற ஹங்கேரியின் புடாபெஸ்ட் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடை படாமல் இருப்பதை ஹங்கேரி உறுதி செய்ய விரும்புகிறது.

வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பனின் தலைமைப் பணியாளர் கெர்கெலி குல்யாஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த விலக்கை வழங்குவார் என நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹங்கேரி கடல் வழி மார்க்கம் இல்லாத நாடு என்பதாலும் நாட்டிற்கான எண்ணெய் வளங்கள் உள்ளூரில் இல்லை என்பதாலும் ஹங்கேரி நாட்டின் எரிசக்தி விநியோகத்தை பாதுகாப்புக்க ரஷ்ய எரிசக்தி முக்கியமானது என குல்யாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் உக்ரைன் ரஷ்யா மோதலை நிறுத்த அமெரிக்கா-ரஷ்யா இடையே உச்சி மாநாடு ஒன்றை நடத்த ஹங்கேரி தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |