குற்றவாளிகள் என அறிவித்த பெண் நீதிபதிகளை வேட்டையாடும் தாலிபான் கொலையாளிகள்
ஆப்கானிஸ்தானில் கொலைக் குற்றவாளிகள் என்று அறிவித்த பெண் நீதிபதிகளைத் தேடிச் சென்று கொலையாளிகள் வேட்டையாடி வருவதாக தகவல் வெ:ளியாகியுள்ளது
இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் நீதிபதிகள் உள்ளிட்ட பலர் நாட்டைவிட்டு வெளியேறும் கட்டாயத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் கொடுங்கோல் ஆட்சியில் ஈடுபடும் தாலிபான்கள், இதுவரை சிறையில் இருந்து ஆயிரக்கணக்கான குற்றவாளிகளையும், தண்டனைக் கைதிகளையும் விடுவித்துள்ளனர்.
தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் விடுவிக்கப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளில் கொலைக் குற்றவாளிகள் பலர் தங்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த பெண் நீதிபதிகளை தற்போது வேட்டையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்களுக்கு முந்தைய ஆட்சியில் 220 பெண் நீதிபதிகள் பணியாற்றிய நிலையில், தற்போது தாலிபான்கள் கைகளுக்குள் ஆப்கன் ஆட்சி சென்றபின், அவர்கள் அனைவரும், மறைந்து வாழ்கின்றனர்.
பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பெண் நீதிபதிகள் அனைவரும் தங்களின் உயிரைப் பாதுகாக்க மறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், பல ஆண்கள் பலாத்காரக் குற்றங்கள், கொலை, கொடுமைப்படுத்துதல் போன்ற குற்றங்களைச் செய்து தண்டனை பெற்றவர்கள். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் அந்தக் குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அந்தக் குற்றவாளிகள் மூலம் பெண் நீதிபதிகள் அனைவருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது என ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.