14 அடி நீள முதலையை ஏழு மணி நேரம் போராடி பிடித்த வேட்டைக்காரர்கள்
அமெரிக்காவில், 14 அடி நீளமுள்ள முதலை ஒன்றை ஏழு மணி நேரம் போராடிப் பிடித்திருக்கிறார்கள் வேட்டைக்காரர்கள்.
ஆயிரக்கணக்கான முதலைகள்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் ஆயிரக்கணக்கான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் நன்னீர் முதலைகள். அதவாது, ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் வாழக்கூடியவை.
Pic: MDWFP/Facebook
பொதுவாக இந்த முதலைகள் மனிதர்களைத்தாக்குவதில்லை. என்றாலும், அவ்வப்போது நாய்களை அவை தாக்குவதாக தெரியவந்துள்ளது.
முதலை வேட்டை சீஸன்
மிசிசிப்பி மாகாணத்தில், ஒரு குறிப்பிட்ட சீஸனில், இந்த முதலைகளை வேட்டையாட அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், Tanner White, Don Woods, Will Thomas மற்றும் Joey Clark என்னும் நான்கு பேர், Yazoo நதி என்னும் நதியிலிருந்து இந்த 14 அடி 3 அங்குல நீளமுடைய முதலையைப் பிடித்துள்ளர்கள்.
அவர்களுக்கு உள்ளூர் வனத்துறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. அவர்கள் அந்த முதலையை தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்கும் காட்சிகள் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |