டசின் கணக்கானோர் மரணம்... மெலிசா புயலால் பேரழிவுப் பிரதேசமான தீவு நாடு
கரீபியன் பிரதேசம் முழுவதும் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ளது நூற்றாண்டின் மிக சக்திவாய்ந்த மெலிசா புயல்.
நேரடியாக குறிவைக்கப்பட்டது
குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியுள்ளதுடன், சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது. அத்துடன் டசின் கணக்கானவர்களின் மரணத்திற்கும் காரணமானது.

வகை 5 என அடையாளப்படுத்தப்பட்ட மெலிசா புயலால் தீவு நாடான ஜமைக்கா நேரடியாக குறிவைக்கப்பட்டதும், அதன் மிக மோசமான தாக்கமும் புதன்கிழமை தெளிவானது.
இந்தப் பகுதியில் இதுவரை ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்று என்றே குறிப்பிடுகின்றனர். ஜமைக்காவில் மட்டும் ஐவர் மரணமடைந்துள்ளதாக இதுவரை வெளியான தகவலில் இருந்து தெரிய வருகிறது.
ஆனால், தற்போது இரண்டாம் வகை புயலாக உருமாறியுள்ள மெலிசா Haiti தீவை மொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது. இப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 20 பேர்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜமைக்காவில், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் கூரைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர், மின்சாரமும் மொத்தமாக தடைபட்டுள்ளது. தீவு நாடு முழுவதும் மெலிசா புயல் மொத்தமாக பேரழிவை ஏற்படுத்திச் சென்றதாக பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் குறிப்பிட்டுள்ளார்.

பலத்த மழை
குடியிருப்புகளின் 80 முதல் 90 சதவீத கூரைகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் மருத்துவமனைகள், நூலகங்கள், காவல் நிலையங்கள், துறைமுக வீடுகள் மற்றும் பிற நகர்ப்புற உள்கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது என்றார்.

இதனிடையே, மூன்றாம் வகை புயலாக உருமாறிய மெலிசா கியூபாவிற்கு வடக்கு நோக்கி நகர்ந்து, தீவின் தென்கிழக்கைத் தாக்கியது. மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று மற்றும் பலத்த மழையைக் கொண்டு வந்து.
புதன்கிழமை இரவு, மெலிசா புயல் மத்திய பஹாமாஸிலிருந்து 105 மைல்கள் தொலைவில் நிலைகொண்டிருந்தது, பஹாமாஸ் பகுதியை இரவில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        