வீட்டைவிட்டு வெளியேற மாகாண நிர்வாகம் அளித்த கடும் உத்தரவு: முடியாது என அடம்பிடிக்கும் ட்ரம்ப்
நிக்கோல் சூறாவளி பஹாமாஸ் பகுதியை தாக்கியுள்ள நிலையில், கட்டாய வெளியேற்ற உத்தரவு இருந்தபோதிலும், டொனால்ட் டிரம்ப் தனது பிரியமான மார்-ஏ-லாகோ மாளிகையில் இருந்து வெளியேற மாட்டார் என்றே கூறப்படுகிறது.
நிக்கோல் சூறாவளி புளோரிடாவை நெருங்கி வரும்போது 1 வகை சூறாவளியாக தீவிரமடையும் எனவும், வியாழன் அதிகாலை கரையைக் கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
@getty
புளோரிடாவை நெருங்கும் நிக்கோல்
உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் நிக்கோல் சூறாவளியானது மேற்கு பாம் கடற்கரைக்கு வெளியே 75 மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புளோரிடா மாகாணத்தில் இயன் சூறாவளி பேரழிவை ஏற்படுத்திச் சென்ற பின்னர், மாகாண நிர்வாகம் இன்னொரு புயலை எதிர்கொள்ளும் பொருட்டு தயார்படுத்தி வந்துள்ளது. இதன்பொருட்டு, பாம் கடற்கரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
@AP
இந்த நிலையில் பாம் கடற்கரை மாவட்டத்தில் அமைந்துள்ள தமது பிரியமான மார்-ஏ-லாகோ மாளிகையில் இருந்து வெளியேற டொனால்டு டிரம்ப் மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளின் திருமணத்திற்காக தயாராகும் டிரம்ப்
இருப்பினும் அவரது விடுதியானது சூறாவளி காரணமாக மூடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, டிரம்ப் குடும்பம் அவரது மகள் டிஃப்பனி திருமணம் தொடர்பில் தயாராகி வருகிறது.
முன்னதாக, அமெரிக்க அரசியலில் சிவப்பு பரவும் என டிரம்ப் சூளுரைத்திருந்த நிலையில், அவரது குடியரசுக் கட்சி கடும் பின்னடைவை எதிர்கொண்டது. இந்த நிலையிலேயே மகளின் திருமணம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.
@dailymail
இருப்பினும், இடைக்கால தேர்தல் தமது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றே அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, 1853 ம் ஆண்டுக்கு பின்னர் நவம்பர் மாதத்தில் புளோரிடா மாகாணம் சூறாவளியை எதிர்கொள்வது இது மூன்றாவது முறை என கூறப்படுகிறது.
நிக்கோல் சூறாவளி ஏற்கனவே பஹாமாஸில் உள்ள Turtle Cay பகுதிதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், புளோரிடாவில் நிக்கோல் புயல் கரையை கடந்த பிறகு வலுவிழப்பதுடன் வியாழன் மற்றும் வெள்ளி மொத்தமாக தீவிரம் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.