தமிழ்நாட்டில் எத்தனை மில்லியனர் குடும்பங்கள் உள்ளன? - வெளியான ஹுருன் அறிக்கை
ஹுருன் இந்தியா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இணைந்து, சொகுசு நுகர்வோர் கணக்கெடுப்பு 2025 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1 கோடி வருமானம் ஈட்டும் இந்தியர்கள்
இந்த அறிக்கையின்படி, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டி, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
2017 - 2018 ஆம் ஆண்டு மதிப்பீட்டில், 88,000 பேர் ஆண்டுக்கு 1 கோடி வருமானம் ஈட்டி வந்த நிலையில், 2023 -2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.27 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதே போல், இந்தியாவில் மில்லியனர் குடும்பங்களின்(ரூ.8.5 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள குடும்பங்கள்) எண்ணிக்கை 8.70 லட்சமாக அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த எண்னிக்கை 90% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனை பேர்?
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், 1,78,600 மில்லியனர் குடும்பங்கள் உள்ளன.
79,800 மில்லியனர் குடும்பங்களுடன் டெல்லி 2வது இடத்திலும், 72,600 மில்லியனர் குடும்பங்களுடன் தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளது.
நகரங்களின் அடிப்படையில்,1,42,000 மில்லியனர் குடும்பங்களுடன் மும்பை முதலிடத்திலும், 68,200 மில்லியனர் குடும்பங்களுடன் புது டெல்லி 2வது இடத்திலும், 31,600 மில்லியனர் குடும்பங்களுடன் பெங்களூரு 3வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில், சென்னை 22,800 மில்லியனர் குடும்பங்களுடன் 6வது இடத்தில் உள்ளது.
முக்கிய பொழுதுபோக்கு
மில்லியனர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமானவ்ர் மது அருந்துவதில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், 35% பேர் ரொக்கம் மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்துவதை விட UPI பயன்படுத்துவை விரும்புகின்றனர்.
இதில் செய்திகளை பெறுவதற்கு 36% பேர் சமூக ஊடகங்களையும், 21% பேர் தொலைக்காட்சிகளையும், 15% பேர் செய்தித்தாள்களையும், 11% பேர் வாட்ஸ்அப் செயலியையும் நம்பியுள்ளனர்.
இதில், 60% பேர் ஆண்டுக்கு 1 கோடிக்கு குறைவாக செலவிடுகின்றனர். அதிக செலவினங்களில், 32 சதவீதம் சுற்றுலாவிற்கு, 27 சதவீதம் கல்விக்கும், 22 சதவீதம் பொழுதுபோக்கும் செலவிடுகின்றனர்.
இந்திய கோடீஸ்வரர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்திருக்கிறார்கள். பலரும் 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் காரை மேம்படுத்தப்படுகிறார்கள். 40% பேர் ஒரே காரை 6 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கிறார்கள்.
மேலும், 45% பேர் பயணத்தை தங்களது ,முக்கிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.அடுத்தபடியாக வாசிப்பு மற்றும் சமையல் உள்ளது.
27% பேர் யோகா செய்வதை விருப்பமான உடற்பயிற்சியாக வைத்துள்ளனர்.
60% பேர், 10 க்கு 8 என்ற அளவில் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |