கணவன், மனைவி இருவரும் தலை நசுங்கி பலி! நொடிப்பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி தலை நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிராக்டர் ஓட்ட பயிற்சி கொடுத்த கணவர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதில் தனது மனைவி கீதாவுக்கு கணவர் சிவக்குமார் டிராக்டர் ஓட்ட பயிற்சி அளித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் கணவன், மனைவி இருவரும் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் சிவக்குமார், கீதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சடலங்களை மீட்ட பொலிஸார்
இதனைப் பார்த்த அருகில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே சமயத்தில் கணவனும், மனைவியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.