உன் மனைவியை பணயமாக எங்களிடம் வைக்கிறீயா? கேட்ட வார்த்தையால் மன விரக்தி அடைந்த கணவன் செய்த செயல்... பகீர் பின்னணி
தமிழகத்தில் மனைவியை பணயமாக வை என மோசமாக கந்துவட்டி கொடுத்தவர்கள் கூறியதால் தற்கொலை முயன்ற கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஏடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் ராஜா. இவர் சத்தியம் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அம்பாதுறையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை வாங்கி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவர் பழனிவேல் ராஜாவிடம் தனது இருசக்கர வாகனத்தின் ஆர்.சி.புக்கை வைத்து ரூபாய் 20 ஆயிரம் வாங்கியுள்ளார். இதனை சுரேஷ் மாதத்தவணை மூலமாக கடன் முழுவதையும் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பழனிவேல் ராஜா, சுரேஷுக்கு ஆர்சி புக்கை தராமல் சாக்குபோக்கு சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் பழனிவேலிடம் வேலை செய்யும் வேல்முருகன் மற்றும் முருகேசன் சாலையில் சென்று கொண்டிருந்த சுரேஷை வழிமறித்துள்ளனர். எங்கள் முதலாளியிடம் நீ ஆர்சி கேட்டுள்ளயா? என தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர்.
இதோடு கட்டவேண்டிய பணத்துக்காக உன் மனைவியை பணயமாக வைக்கிறீயா என கேவலமாக பேசியுள்ளனர்.
இதனால் மனம் விரக்தி அடைந்த சுரேஷ் சுடு கம்பியால் தன் வயிற்றுப் பகுதியில் சூடு வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர் சுரேஷ் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் பழனிவேல் ராஜா, வேல்முருகன், முருகேசன் ஆகிய மூவரையும் பொலிசாரை கைது செய்துள்ளனர்.