மனைவியை வேறொருவருக்கு கட்டிக் கொடுத்த கணவன்! முதலிரவுக்கு பின் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, அதன் பின் நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதி தான் சோனு மற்றும் கோமல். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதி பல இடங்களில் வேலை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் நினைத்தது போன்ற வேலை கிடைக்கவில்லை.
இதனால் கடும் விரக்தியில் இருந்த இவர்கள், பணம் எப்படி சம்பாதிப்பது? குறுகிய நாட்களில் எப்படி பணக்காரர் ஆகி செட்டில் ஆகுவது என்று யோசித்துள்ளனர். அப்போது தான், இவர்கள் அப்பகுதியில் உள்ள சுமன் என்ற திருமண தரகரை சந்தித்துள்ளனர்.
சந்தித்த பின் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளனர். அதாவது சோனுவின் மனைவியை, இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இதனால் நல்ல ஒரு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறோம், நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு, அதன் பின் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் போடப்படும் நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து செல்வதாக முடிவு செய்துள்ளனர்.
அதன் படி திருமணத் தரகர் சுமன், ரவி என்பவருக்கு கோமலை பெண் கேட்டுள்ளார். கோமலுடன் இருந்த கணவர் சோனுவை, தரகர் பெண்ணின் சகோதரர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, ரவி மற்று கோமலுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கான முதலிரவு முடிந்த மறுநாள் விழித்து பார்த்த போது, கோமலு காணமல் போயுள்ளார்.
கோமலு மட்டுமின்றி, வீட்டில் திருமணத்திற்கு போடப்பட்டிருந்த நகைகள், பணம் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணம் போக, உடனே ரவி குடும்பத்தினர், இது போன்று கோமலு நகைகளுடன் காணமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இருவரும் மட்டுமின்றி, தரகரும் சேர்ந்து தான் இந்த பிளானை போட்டுள்ளார் என்பது தெரியவர, பொலிசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.