முன்னாள் மனைவியை கொன்று.,கொடூர மீன்கள் உள்ள ஆற்றில் வீசிய நபர்
பிரேசில் நாட்டில் நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து, காருடன் கொடூர மீன்கள் உள்ள ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிந்த முன்னாள் மனைவி
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தைச் சேர்ந்த கார்லோஸ் எடுவார்டோ என்ற நபர், கடந்த வாரம் தனது முன்னாள் மனைவியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
35 வயதான கார்லோஸ் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரிந்த தனது முன்னாள் மனைவியான அமண்டா கரோலின் டி அல்மெய்டாவை (31) தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால், அவர் வர மறுத்ததால் கடந்த 19ஆம் திகதி அவரை கார்லோஸ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் அமண்டாவின் உடலை காரின் டிக்கியில் திணித்துச் சென்று, கொடூர மீன்களான பிரானாக்கள் நிறைந்த ஆற்றில் வீசியுள்ளார்.
இன்னும் மீட்கப்படவில்லை
துரதிர்ஷ்டவசமாக டைட்டே நதியில் இருந்து அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை. எனினும் பாதிக்கப்பட்டவரின் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கார்லோஸ், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். அவரது 38 வயது சகோதரர் கார்லோஸ் கைதான ஒருநாள் கழித்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் 17 மற்றும் 7, 5 வயதுடைய மூன்று பிள்ளைகள் தற்போது குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |