மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர்! குடும்பத்தையே புரட்டி போட்ட அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரின் உண்மை முகம் பொலிஸ் விசாரணையில் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியை சேர்ந்தவர் விஜய்(35). இவர் அதே பகுதியில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரியா(30) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளது. சம்பவ தினத்தன்று விஜய் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார்.
குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பிரியா வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி சித்ரா அரை மணிநேரமாக தனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்பதால் அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. அப்போது வீட்டிற்கு அருகே உள்ள மளிகை கடைக்கு போன் செய்து சித்ராவிடம் விவரத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து சித்ரா வீட்டின் சமையலறை ஜன்னல் பக்கம் எட்டிப்பார்த்த பொழுது பிரியா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். அவர் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியா கழுத்தில் இருந்த நகை மற்றும் காலில் அணிந்திருந்த கொலுசு போன்றவை காணாமல் போனதால் இது திட்டமிட்டு கொலையா? அல்லது நகைக்கு ஆசைப்பட்டு நடந்த சம்பவமா என்ற கண்ணோட்டத்தில் பொலிஸ் விசாரித்தது.
இந்நிலையில் தெருவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியை சோதனை செய்தபொழுது பிரியா கணவர் சிறிது நேரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்தது பதிவாகி இருந்தது. இதனால் பொலிஸ் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது நான் தான் கொலை செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார். ஆதாவது அவரது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை பல முறை விஜய் கண்டித்துள்ளார்.
ஆனால் மீண்டும் அதே தவறை பிரியா செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட்டதாக கூறினார். கணவனே திட்டமிட்டு மனைவியை கொலை செய்து பின்னர் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.