ஃப்ரீஸருக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண் உடல்: அதிகாரிகள் தெரிவித்துள்ள புதிய தகவல்
அமெரிக்காவில் பெண்ணொருவர் மாயமான நிலையில், அவரது உடல் அவரது வீட்டிலிருந்த ஃப்ரீஸருக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது அந்தப் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாயமான பெண்
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள Norfolk என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த லினா (Lina M. Guerra Echavarria, 39) என்னும் பெண்ணைக் காணவில்லை என, பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி, அவரது சகோதரர் பொலிசில் புகாரளித்திருந்தார்.

லினாவைத் தேடிவந்த பொலிசார், மூன்று நாட்களுக்குப் பின், அவரது உயிரற்ற உடல் அவரது வீட்டிலிருந்த ஃப்ரீஸருக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார்கள்.
தலைமறைவான கணவன்
இதற்கிடையில், லினாவின் கணவனான டேவிட் (David Varela, 38) வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், டேவிட் வெளிநாடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் FBI இயக்குநரான காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அவர் ஹொங்ஹொங்கில் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
More big news today… @FBI is announcing the successful overseas apprehension of David Varela, a 38-year-old Navy Reservist who is wanted for first-degree murder in connection with the death of his wife, Lina Guerra. Lina’s body was found inside a freezer in their Norfolk…
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) April 15, 2026
மகளைக் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் டேவிடிடம் லினாவின் பெற்றோர் அவர் எங்கே என்று விசாரிக்க, லினா திருட்டுக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய டேவிட், லினா சிறையிலிருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், ஊடகங்கள் மேற்கொண்ட விசாரணையில் டேவிட் கூறியது பொய் என்பதும், லினா திருடவும் இல்லை, அவர் கைது செய்யப்படவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள டேவிட் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |