குடும்ப தகராறு.., சந்தையில் வைத்து மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்
மனைவியுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் சந்தையில் வைத்து மனைவியை கணவர் கொலை செய்துள்ளார்.
மனைவி கொலை
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், கோரக்பூரில் இருக்கும் பரபரப்பான சந்தை ஒன்றில் இரவு 8 மணியளவில் கணவர் ஒருவர் மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார்.
கணவர் மற்றும் மனைவியான விஸ்வகர்மா சவுகான் மற்றும் மம்தா சவுகான் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக தெரிகிறது.
இவர்களுக்கு 13 வயது மகள் இருக்கும் நிலையில் இருவரும் ஒன்றை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
மேலும், இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது மகளுடன் மம்தா தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், புகைப்படம் எடுப்பதற்காக மம்தா வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் அவரது கணவர் பின்தொடர்ந்து சென்று இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
அதாவது தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மம்தாவை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பித்து சென்றுவிட்டார் விஸ்வகர்மா.
இதில், மம்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |