மனைவியை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவன்!
உத்தர பிரதேசத்தில் மனைவியை கடித்த பாம்பை கணவன் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற வினோத சம்பவம் நடந்துள்ளது.
பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த அந்த நபர் சொன்ன காரணம் பலரை அதிர்ச்சி அடையச் செய்யும்.
மனைவியை கடித்த பாம்பு
உன்னாவ் மாவட்டம், சபிபூர் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த உமர் அத்வா என்ற கிராமத்தைச் சேர்ந்த நரேந்திர என்ற நபர், சாக்கு மூட்டையில் இருந்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி குஸ்மாவை பாம்பு கடித்ததாக தெரிகிறது. பாம்பு கடித்த சில நொடிகளில் அந்த பெண் அலறி மயங்கி விழுந்தார்.
maharashtratimes
உடனே அந்த பெண் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், இந்த அசம்பாவிதம் குறித்து அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதே பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த கணவன்
ஆச்சரியம் என்னவென்றால், அந்த நபர் தனது மனைவியைப் பார்க்க உடனடியாக மருத்துவமனைக்கு வரவில்லை. மாறாக வீட்டுக்குச் சென்று பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த நபரிடம் பாம்பை ஏன் மருத்துவமனைக்கு கொண்டு வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.
News18
தனது மனைவியை எந்த வகைப் பாம்பு கடித்தது என்பதை பார்த்து, அதற்கேற்ப அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார்.
அந்த பெண் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மாவட்ட மருத்துவமனை மருத்துவர் துஷார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
மற்றொரு சம்பவம்
உத்தர பிரதேசத்தில் மக்கி பொலிஸ் வட்டத்திற்குட்பட்ட அப்சல் நகர் பகுதியிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
கணவர் ஒரு பாம்பு மற்றும் காயமடைந்த மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது. “என் மனைவியை எந்த பாம்பு கடித்தது என்று கேட்டால் என்ன செய்வது? நீங்களே பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பாம்பை கொண்டு வந்தேன்” என்று கணவன் மருத்துவரிடம் கூறியுள்ளார்.