நீ எனக்கு வேண்டாம்! ஆத்திரத்தில்.. மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.. மருத்துவமனையில் துடிதுடித்து இறந்த கொடூரம்
சேலம் மாவட்டத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததால் மனைவி மீது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் குகை பகுதியில் வசித்து வருபவர் யேசுதாஸ். இவரது மனைவி ரேவதி(48). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக கணவன் மனைவிக்கிடையே ஒத்துப்போகாததால் அடிக்கடி வாக்குவாதங்கள், சண்டைகள் போன்றவற்றை நடைபெற்று வந்துள்ளது.
இனி கணவருடன் வாழ விரும்பாத ரேவதி விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து ரேவதி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக சேலம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார்.
அப்போது சத்தமில்லாமல் பின்னாடி வந்து கொண்டிருந்த யேசுதாஸ் மனைவி மேல் உள்ள ஆத்திரத்தில் கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து ரேவதி மீது வேகமாக வீசியுள்ளார். இதனை சிறிது கூட எதிர்பார்க்காத ரேவதி ஏற்பட்ட வலியால் மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதனையடுத்து உடனடியாக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் கொடுக்காமல் ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தலைமறைவாக இருக்கும் யேசுதாஸ் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.