இரவில் தூங்கவே மாட்டார்! திருமணமான 6 மாதத்தில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்... பகீர் வாக்குமூலம்
இந்தியாவில் திருமணமான சில மாதத்தில் மனைவியை கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜாகீர். இவருக்கும் முசிலா (20) என்ற பெண்ணிற்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு முன்னர் ஜாகீர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த 8 மாதத்துக்கு முன்னர் ஊர் திரும்பினார்.
திருமணத்துக்கு பின்னர் சொந்த ஊரிலேயே அவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
திருமணம் ஆனது முதலேயே மனைவி மீது சந்தேகப்பட்டு வந்திருக்கிறார் ஜாகீர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஜாகீர் இரவில் தூங்க முடியாமல் இருந்திருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன்னரும் இரவு தூங்காமல் முழித்து கொண்டே இருந்த ஜாகீர் திடீரென தூங்கி கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.
திடீரென அவருக்கு கொலை செய்ய எண்ணம் வந்த நிலையிலேயே இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
இதையடுத்து முசிலாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த குடும்பத்தார் அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து பொலிசார் கொலையாளி ஜாகீரை கைது செய்த நிலையில் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
மேலும் அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
