பிள்ளைகளின் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு கணவன், மனைவி மரணம்! அதிர்ச்சியில் உறைந்த 3 மகள்கள்
அமெரிக்க மாகாணம் டெக்சாஸில் தம்பதியர் தங்கள் மகள்களின் கண்முன்னே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூட்டில் கணவன் மனைவி மரணம்
டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் (Houston) கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
இதில் 43 வயது கணவரும், 34 வயது மனைவியும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு துப்பாக்கி குண்டு தாக்கப்பட்டதால் காயங்களுடன் குறித்த தம்பதியின் உடல்கள் மீட்கப்பட்டன. அதில் பெண்ணுக்கு பல துப்பாக்கிச் சூட்டு காயங்களும், ஆணுக்கு ஒரு துப்பாக்கிச் சூட்டு காயமும் அடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கணவன் தனது மனைவியை சுட்டுக் கொன்றதாக நம்புவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்த தம்பதியரின் மூன்று மகள்களின் கண்முன்னேயே இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 6 முதல் 14 வயதுடைய மூன்று மகள்களும் தங்கள் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை கேட்டதாக கூறினர்.
இதுதொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ''உயிரிழந்த பெண் மற்றும் சந்தேக நபர் ஆகியோரின் அடையாளங்கள், ஹாரிஸ் கவுண்டி தடய அறிவியல் கழகத்தின் சரிபார்ப்பு நிலுவையில் உள்ளன.
இந்த சம்பவம் கொலை-தற்கொலை என நம்பப்படுகிறது, ஆண் மற்றும் பெண்ணின் பிரேத பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் நாளில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
KTRK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |