13 வயது மகள் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றுவிட்டு..தூக்கில் தூங்கிய அப்பா, அம்மா
சென்னையில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் மகளை கொன்றுவிட்டு, தனது மனைவியுடன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
40 லட்சம் ரூபாய்
சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(40). இவர் சிறுதானிய வியாபார கடை நடத்தி வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக இவர் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் ஜெகநாதனிடம் பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஜெகநாதன் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனையடுத்து ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் தங்களது 13 வயது மகள் காவ்யாவை கயிற்றினால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
ஒரே கயிற்றில் தூக்கிட்டு
பின்னர் இருவரும் ஒரே கயிற்றில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர். ஜெகநாதனுக்கு அவரின் தாயார் போன் செய்து அவர் எடுக்காததால், சந்தேகமடைந்து வீட்டின் சன்னல் வழியாக பார்த்தபோது மகனும், மருமகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |