அனைத்து வீட்டிலும் மில்லியனர்கள் - இந்தியாவில் உள்ள உலகின் பணக்கார கிராமம்
இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்று, உலகின் பணக்கார கிராமமாக அறியப்படுகிறது.
மதாபர் கிராமம்
கிராமம் என்றாலே பொதுவாக விவசாய நிலம், கூரை வீடுகள், தரமற்ற சாலைககள் என்று தான் நினைப்போம்.
ஆனால், இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்று உலகின் பணக்கார கிராமமாக அறியப்படுகிறது.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் மதாபர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 7,600 வீடுகள் உள்ளதாகவும், 92,000 பேர் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இங்கு 17 வங்கி கிளைகள் உள்ளது. இதில், மொத்தமாக ரூ.5,000 கோடிக்கு அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?
மதாபர் கிராமத்தின் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் அங்குள்ள 65 சதவீதத்திற்கு அதிகமானோர் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் வளைகுடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களின் சேமிப்பை வங்கிகள் மூலம், மதாபர் கிராமத்துக்கு அனுப்புகின்றனர்.
மேலும், அந்த பணம் அந்த கிராமத்தின் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், சாலைகள் அனைத்தும் நகரம் போல் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தையே தங்கள் வீடுகளில் பயன்படுத்துகின்றனர்.
குஜராத்தில் கோவில்கள் கட்டியதற்கு பெயர் பெற்ற கச்சின் ஸ்மித்திரி சமூகத்தினரால், 12 ஆம் நூற்றாண்டில் இந்த கிராமம் உருவாக்கப்பட்டது.
நாளடைவில், பிற சமூகத்தினரும் இந்த கிராமத்திற்கு குடி பெயர தொடங்கினர்.
அந்த கிராமத்தில் இருந்து வரும் மக்களிடம் தொடர்பு கொள்ள, 1968 ஆம் ஆண்டே லண்டனில் 'மாதபர் கிராம சங்கம்' என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தானின் தாக்குதலில், சேதமடைந்த விமான பாதையை இந்த கிராமத்தை சேர்ந்த 300 பெண்கள் தாமாக முன்வந்து 72 மணி நேரத்தில் சீரமைத்தனர்.
இதனை போற்றும் வகையில், இந்திய அரசு 2018 ஆம் ஆண்டு போர் நினைவு சின்னத்தை இங்கு கட்டியெழுப்பியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |