விமானத்தில் செல்லும்போது விமானிகள் ஏன் வாசனை திரவியங்கள் அடிப்பதில்லை தெரியுமா?
விமானத்தில் செல்லும்போது விமானிகள் வாசனை திரவியங்கள் அடிக்காததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.
என்ன விதிகள்
பொதுவாகவே விமானத்தில் செல்லும்போது பயணிகளுக்கு விதிகள் உண்டு. அதேபோல, விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு கூடுதலாகவே விதிகள் உள்ளன.
ஏனென்றால் ஒரு இடத்தில் இருந்து பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு அவர்கள் பல விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதில் ஒன்று தான் வாசனை திரவியங்கள் பயன்படுத்தாமல் இருப்பது.
இதன் பின்னால் உள்ள காரணம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது வாசனை திரவியங்களில் ஆல்கஹால் இருப்பதால் எரியும் தன்மையை கொண்டிருக்கும். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கு அதனை பயன்படுத்த மாட்டார்கள்.
அடுத்ததாக, வாசனை திரவியங்களில் வாசனை அதிகமாக இருப்பதால் விமானிகளின் கவனம் சிதற வாய்ப்புள்ளது. இதனால் பயணிகளுக்கு பெரிய ஆபத்தாக மாறிவிடும்.
மேலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு ப்ரீதலைசர் சோதனை செய்வார்கள். ஆனால், அவர்கள் ஆல்கஹால் இருக்கும் வாசனை திரவியங்களை பயன்படுத்தினால் நேர்மறையான முடிவுகளை கொடுக்கும்.
அதேபோல, ஆல்கஹால் கொண்ட Mouthwashes மற்றும் பற்பசைகளைப் பயன்படுத்தக்கூடாது.
மேலும், சில பயணிகளுக்கு வாசனை திரவியங்களால் ஒவ்வாமை ஏற்படும். இந்த காரணத்திற்காகவும் விமானத்தில் அதனை பயன்படுத்த அனுமதியில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |