அரண்மனை முழுக்க தங்கம், வைரம்.. இருந்தாலும் விஷம் வைத்து கொன்றுவிடுவார்கள் என்ற பயம்: யார் இந்த பணக்காரர்?
தன்னை யாராவது விஷம் வைத்து கொன்றுவிட்டு செல்வத்தை எல்லாம் பறித்து விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இவருக்கு இருந்தது.
யார் இவர்?
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நாட்டின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தவர் ஐதராபாத் நிஜாம் நவாப் மிர் உஸ்மான் அலி கான் (Mir Osman Ali Khan). 77 ஆண்டுகளுக்கு முன்பே இவரது சொத்து மதிப்பு ரூ. 17.5 லட்சம் கோடி இருந்தது என டைம் இதழ் கூறியுள்ளது.
பிரபல டைம் இதழானது 1937 -ம் ஆண்டு பிப்ரவரியில் இதழில் முதல் பக்கத்தில் இவருக்கு இடம் அளித்து உலகின் மிகப் பெரிய பணக்காரராக அறிவித்தது.
இவரது அரண்மனை மேசை டிராயரில் புகழ்பெற்ற ஜேக்கப் வைரம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எலுமிச்சை அளவு கொண்ட இந்த வைரம் 280 காரட் இருந்தது. ஆனால் நிஜாம் இதனை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.
அதிர்ஷ்டமாக மாறும் அயோத்தி ராமர் கோயில்.., படையெடுக்கும் Coca-Cola, Bisleri, Dabur, Parle நிறுவனங்கள்
மேலும், இவரது தோட்டத்தில் தங்க செங்கற்கள் ஏற்றப்பட்ட லாரிகள் புதர்களுக்கு நடுவே நிறுத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், அரண்மனையில் வைரம், நகைகள் வைக்க இடமில்லாத நிலை இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
இவருக்கு இருந்த பயம்
நிஜாம் பெரிய பணக்காரராக இருந்தாலும் கஞ்சத்தனமாக இருப்பார். அது எப்படி என்றால் இவரிடம் நூற்றுக்கணக்கில் தங்க தட்டுகள் இருந்தாலும் டின் பாத்திரங்களில் உணவை சாப்பிடுவார். அழுக்கு துணிகளை தான் அணிவார்.
குறிப்பாக இவரை சந்திக்க வந்தவர் ஆஷ்டிரேயில் அணைந்த சிகரெட்டை விட்டுச் சென்றாலும் அதனை மீண்டும் பயன்படுத்துவார்.
இதனிடையே, தன்னை யாராவது விஷம் வைத்து கொன்றுவிட்டு தன் செல்வத்தை கைப்பற்றி விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இவரிடம் உள்ளது. இதனால், சாப்பிடும் முன்பு அதை முதலில் சாப்பிட்டு பார்ப்பதற்கு ஒரு குழுவை அழைத்துச் செல்வார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |