சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்திய தம்பதி மாயம்: எழுந்துள்ள சந்தேகம்
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்திய தம்பதி மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்துக்குச் சென்ற இந்திய தம்பதி மாயம்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பப்பா சந்திரசேகரும் (Pabba Chandrasekhar, 51) அவரது மனைவியான ஸ்வப்னாவும் (42), ஜூன் மாதம் 22ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

ஆனால், ஜூலை மாதம் 8ஆம் திகதி, அவர்கள் குடும்பத்தினருடனான தொலைபேசித் தொடர்பை நிறுத்தியுள்ளனர்.
அவர்களுடைய மொபைல்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, தன் பெற்றோரைக் காணவில்லை என தம்பதியரின் மகளான ஷ்ரேயா (23) பொலிசில் புகாரளித்துள்ளார்.
எழுந்துள்ள சந்தேகம் விடயம்
என்னவென்றால், தொழிலதிபரான சந்திரசேகரும் அவரது மனைவியும், 60க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையிலும் தொழிலுக்காகவும், அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி சுமர் 50 கோடி ரூபாய் வாங்கியுள்ளனர்.
ஆக, அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்களோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே, அவர்கள் எங்கிருக்கிறார்கள், உண்மையாகவே சுவிட்சர்லாந்துக்குதான் சென்றார்களா என்பதை அறிவதற்காக, அவர்களுடைய பயணத் திட்டம், பாஸ்போர்ட் பதிவுகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சரிபார்க்கும் முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
தம்பதியரைக் குறித்து யாருக்காவது தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |