அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்: குற்றவாளி சிக்கினார்
An Indian man wanted in the United States for allegedly murdering his former roommate has been arrested: இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயத்தில், அவரைக் கொலை செய்ததாக கருதப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமானார்.

ஜனவரி மாதம் 2ஆம் திகதி, அர்ஜூன் ஷர்மா (26) என்னும் நபர், நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார். இந்த அர்ஜூன், நிகிதா தங்கியிருந்த அதே குடியிருப்பில் அவருடன் தங்கியிருந்தவர் ஆவார்.
இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு
நிகிதாவை தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், ஜனவரி மாதம் 3ஆம் திகதி, அர்ஜூன் வாழ்ந்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே நிகிதாவின் உயிரற்ற உடலைக் கண்டு பிடித்தார்கள்.

அர்ஜூன் தலைமறைவாகிவிட, அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருந்தார்கள்.
முரணான தகவல்கள்
அர்ஜூன் நிகிதாவின் காதலர் என அமெரிக்க பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், அவர் தன் மகளுடைய காதலர் அல்ல என்றும், அவர் தன் மகளுடைய அறைத்தோழர் மட்டுமே என்றும், இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே தன் மகளை அர்ஜூன் கொலை செய்துவிட்டதாகவும் நிகிதாவின் தந்தை கூறியுள்ளார்.
அத்துடன், ஜனவரி மாதம், அர்ஜூன் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், அர்ஜூன் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 25ஆம் திகதி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அர்ஜூன் கைது குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவலளிக்கட்டுள்ளதாகவும், அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |