உலகின் அசுத்தமான நகரங்கள் - பட்டியலில் உள்ள ஒரே இந்திய நகரம் எது தெரியுமா?
உலகின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் ஒரே இந்திய நகரம் இடம் பிடித்துள்ளது.
உலகின் அசுத்தமான நகரங்கள்
2025 ஆம் ஆண்டுக்கான உலகளவில் சுத்தமான மற்றும் அசுத்தமான நகரங்களின் பட்டியலை Radical Storage என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் சுற்றுலா, பயண நிலைத்தன்மை, நகர உள்கட்டமைப்பு, பொருளாதார செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த பார்வையாளர் ஈர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகளை வைத்து 20 நகரங்களை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத், இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே நகரம் ஆகும்.
அசுத்தமான நகரங்களின் பட்டியலில் ஹைதராபாத் 18 வது இடத்தை பிடித்துள்ளது.
ஹங்கேரி தலைநகர் புடாபஸ்ட் முதலிடத்திலும், இத்தாலி தலைநகர் ரோம் 2வது இடத்திலும் , அமெரிக்காவின் லாஸ் வேகஸ் 3வது இடத்திலும் உள்ளது.
இதே போல் சுத்தமான நகரங்களின் பட்டியலில் போலந்தின் கிராக்வோக் முதலிடத்திலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா 2வது இடத்திலும், சிங்கப்பூர் 3வது இடத்திலும், போலந்து தலைநகர் வார்ஷா 4வது இடத்திலும், கத்தார் தலைநகர் தோஹோ 5வது இடத்திலும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |