மாயமான குழந்தை... பணம் கேட்டு மிரட்டிய நபர்: பின்னர் நிகழ்ந்த துயரம்
Sacked Hyderabad guard kidnaps girl from society clubhouse, kills her: ஹைதராபாதில் செக்யூரிட்டி கார்டாக பணி புரியும் ஒருவரின் வேலை பறிக்கப்பட்ட நிலையில், குழந்தை ஒன்றைக் கடத்திக் கொலை செய்துள்ளார் அவர்.
ஹைதராபாதிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் வாழும் அறிவியலாளர் மில்ட்டன் ஃபெர்னாண்டஸ் மோசஸ்.
மாயமான குழந்தை...
மோசஸின் குழந்தையான ஆரெலியா (5) சனிக்கிழமையன்று மாயமான நிலையில், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசியவர், மோசஸின் மகளைக் கடத்தி வைத்துள்ளதாகவும், 20 லட்ச ரூபாய் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த அவர்கள், குழந்தை நடமாடுவதையும் அவள் பின்னால் ஒருவர் செல்வதையும் கவனித்துள்ளனர்.

அழைப்பு வந்த மொபைலை ட்ராக் செய்தபோது, அது அந்தக் குடியிருப்பில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்யும் ஒருவருடையது என தெரியவந்துள்ளது.
அங்குள்ள 7 செக்யூரிட்டி கார்டுகளையும் கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொள்ள, அதே கட்டிடத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்த விக்ரம் என்பவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வேலை போனது தெரியவந்துள்ளது.
விக்ரம், அந்தக் குழந்தையைக் கடத்தி வைத்துக்கொண்டு, அந்த கட்டிடத்தில் வேலை செய்யும் ஒரு செக்யூரிட்டி கார்டின் மொபைலை வாங்கி குழந்தையின் தந்தையை அழைத்து பணம் கேட்டி மிரட்டியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து சென்ற விக்ரம், குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்வது கடினம் என்பதால், குழந்தையைக் கொன்று தண்ணீர்த் தொட்டி ஒன்றிற்குள் அவளது உடலை மறைத்துவைத்துள்ளார்.
விக்ரம் சென்ற திசையைக் கவனித்த மற்ற செக்யூரிட்டி கார்டுகள் அளித்த தகவலின் பேரில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று விக்ரம் கைது செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.