வெளிநாடொன்றில் மாயமான இந்திய இளைஞர்: நீடிக்கும் மர்மம்
பின்லாந்து நாட்டில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.
மாயமான இந்திய இளைஞர்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மணிதீப் ரெட்டி குஜ்ஜா (18), கல்வி கற்பதற்காக 2025ஆம் ஆண்டு பின்லாந்துக்குச் சென்றுள்ளார்.

தன் பெற்றோரான மமதா, முத்தியாம் ரெட்டி மற்றும் தன் தம்பியுடன் தினமும் மொபைலில் பேசும் மணிதீப், மே மாதம் 5ஆம் திகதி தன் பெற்றோரிடம் 5,000 ரூபாய் கேட்டுள்ளார்.
Lahti என்னுமிடத்தில் தங்கியிருந்த மணிதீப், தாயிடமிருந்து பணம் வந்ததும், பின்லாந்தின் தலைநகரான Helsinkiக்குச் சென்றுள்ளார்.
அதற்குப் பின் அவரிடமிருந்து யாருக்கும் எந்த தகவலும் கிடைக்காததால் நீதிமன்றத்தை அணுகி தங்கள் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு கோர, நீதிமன்றம் இந்திய அதிகாரிகள் மூலம் பின்லாந்து அதிகாரிகளிடம் மணிதீப்பைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கோரியுள்ளது.
பின்லாந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மணிதீப், Helsinkiயிலுள்ள ஒரு சிற்றுண்டி சாலையில் சிற்றுண்டி அருந்திவிட்டு மால் ஒன்றிற்குள் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதற்குப் பிறகு மணிதீப் தனது கிரெடிட் கார்டையோ டெபிட் கார்டையோ பயன்படுத்தவில்லை. ஆக, அவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
மகனைக் காணாமல் தவிக்கும் பெற்றோர் பின்லாந்துக்குச் சென்று மகனைத் தேடலாம் என்றால், பின்லாந்து அவர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.
ஆக. மகனைக் காணாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல், கவலையிலும் கண்ணீரிலும் ஆழ்ந்துள்ளது மணிதீப் குடும்பம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |