தென் இந்தியாவில் அமையும் இந்தியாவின் முதல் செயற்கை கடற்கரை - எங்கே தெரியுமா?
இந்தியா மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கத்தில் நிலத்தாலும் சூழப்பட்டுள்ள தீபகற்ப நாடு ஆகும்.
இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என தென் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் கடற்கரைகளை கொண்டுள்ளன.
ஆனால், ஆந்திராவில் இருந்து 2014 ஆம் ஆண்டில் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் மட்டும் கடற்கரைகள் இல்லை.
இந்தியாவின் முதல் செயற்கை கடற்கரை
தெலுங்கானா மக்கள் கடற்கரையை ரசிக்க, அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், தெலங்கானாவில் முதல் செயற்கை கடற்கரையை உருவாக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ.225 கோடி மதிப்பீட்டில், அரசு மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ் , இதன் கட்டுமான பணிகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் நகரின் புறநகர் பகுதியில் உள்ள Kotwal Guda பகுதியில் இந்த கடற்கரை அமைக்கப்பட உள்ளது. அங்கு ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கும் ஏரியை இந்த பணிக்காக தேர்வு செய்ய பரிசீலித்து வருகின்றனர்.
என்ன வசதிகள்?
இது வெறும் நீர் மற்றும் மணல் உள்ள கடற்கரையாக மட்டுமல்லாது, மிதக்கும் வில்லாக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், படகு சவாரி, விளையாட்டுகள், ஸ்கேட்டிங், பூங்காக்கள் உள்ளிட்ட சாகச மற்றும் ஓய்வுக்கான வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய TGTDC நிர்வாக இயக்குநர் வல்லுரு கிராந்தி, "பிரான்ஸ் தலைநகர் பாரிசின் சீன் நதிக்கரையில், பிளேஐஸ் திட்டத்தின் மூலம் செயற்கை கடற்கரை உருவாக்கப்பட்டதை ஆன்லைனில் பார்த்தோம்.
பாரிஸ் போல் ஹைதராபாத்தும் நிலத்தால் சூழப்பட்ட நகரம் எனவே இங்கு செயற்கை கடற்கரையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்" என கூறினார்.
இந்த செயற்கை கடற்கரை செயல்பாட்டிற்கு வந்தால், இந்தியாவில் செயற்கை கடற்கரை கொண்டுள்ள முதல் மாநிலம் என்ற பெருமையை தெலங்கானா பெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |