நள்ளிரவு 2 மணிக்கு சைக்கிளிங்: இளம்பெண்ணின் வைரல் வீடியோ: ஹைதராபாத் மக்கள் பெருமிதம்
ஹைதராபாத்தில் இரவு நேரத்தில் சைக்கிளிங் செய்த இளம்பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இளம்பெண்ணின் வைரல் வீடியோ
ஹைதராபாத்தை சேர்ந்த தொழிற்முனைவோரான காவ்யா மேதி கண்டேல்வால்(kavya methi khandelwal) என்பவர், அதிகாலை 2 மணிக்கு சைக்கிளிங் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
பொதுவாக இந்திய நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நேரங்களாக கருதப்படும் நேரத்தில் காவ்யா மேதி சைக்கிளிங் செய்து இருப்பது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பி இருப்பதுடன் ஹைதராபாத் நகர மக்களுக்கு பெருமிதத்தையும் வழங்கியுள்ளது.
மேலும் அந்த பகுதியில் காவ்யா மட்டுமின்றி வேறு சில பெண்களும் நள்ளிரவில் சைக்கிள் ஓட்டுவது பதிவாகியுள்ளது.
காவ்யாவின் மகிழ்ச்சி
அந்த வீடியோவில், காவ்யா தனது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “ஹைதராபாத்! அதிகாலை 2 மணி நான் சைக்கிள் ஓட்டுகிறேன், வானிலை மிகவும் அருமையாக உள்ளது, என்னுடைய வாழ்க்கையில் இத்தகைய அனுபவத்தை நான் அனுபவித்ததே இல்லை என நினைக்கிறேன்”
“இதுதான் என்னுடைய வழி, இது இப்படித்தான் இருக்கிறது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த வீடியோவில், காவ்யா தன்னுடைய சகோதரியுடன் வேடிக்கையான சைக்கிள் பந்தயத்திலும் ஈடுபடுகிறார்.
ஹைதராபாத் மக்கள் பெருமிதம்
காவ்யா மேதி-யின் வீடியோ விரைவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, சுமார் 3 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை பார்த்து உள்ளதுடன், 2 லட்சம் விருப்பங்களை பெற்றுள்ளது.
வீடியோவின் கமெண்டில், கார்த்திக் என்ற ஒருவர், ஹைதராபாத் நகரை பற்றி நல்ல விதமாக யாராவது பேசும் போது, தான் தனிப்பட்ட முறையில் பாராட்டப்படுவதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |