அதிவேக Escape System சோதனையில் வெற்றி! சாதனை படைத்த இந்தியா
அதிவேக வெளியேற்று அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
சாதனை படைத்த இந்தியா
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO) இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் முக்கிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, அவசர காலங்களில் போர் விமானங்களில் இருந்து வேகமாக வெளியேறும் (escape system) அதிவேக ராக்கெட் ஸ்லெட்(High Speed Rocket Sled) அமைப்பை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது.
Defence Research and Development Organization (DRDO) has successfully conducted a high-speed rocket-sled test of fighter aircraft escape system at precisely controlled velocity of 800 km/h- validating canopy severance, ejection sequencing and complete aircrew-recovery at Rail… pic.twitter.com/G19PJOV6yD
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) December 2, 2025
இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், இந்திய போர் விமானிகளின் முழுமையான மீட்பு மற்றும் முக்கிய பாதுகாப்பு அளவீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோதனை வெற்றியின் மூலம் பாதுகாப்பான வெளியேற்ற அமைப்பு திறன்களை கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என செவ்வாய்க்கிழமை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதிவேக ராக்கெட் ஸ்லெட் சோதனையானது, சண்டிகரின் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ரிசர்ச் லேபாரட்டரி-யில்(TBRL) ரயில் ட்ராக் ராக்கெட் ஸ்லெட் மையத்தில்() நடைபெற்றுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), புதிய வெளியேற்று அமைப்பை சுமார் 800 கி.மீ/ மணி என்ற துல்லியமான வேகத்தில் சோதனையை நடத்தியுள்ளது.
கனோபி உடைப்பு(Canopy Serverance), வெளியேற்ற வரிசைமுறை(Ejecation Sequencing), விமானப் பணியாளர்களின் முழுமையான மீட்பு(Complete Aircrew Recovery) ஆகியவை சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |