உலகின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார்? சச்சினா - கோலியா? முன்னாள் இந்திய கேப்டன் பதில்
உலகின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பதிலளித்துள்ளார்.
சச்சினை முந்தைய கோலி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52 வது(306 போட்டிகளில்) ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்த அதிரடி சதத்தின் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் ஒரு வடிவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட் வடிவில் 51 சதங்கள் விளாசி இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முந்தியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, 49 சதங்கள் விளாசி இருந்த சச்சினை, 37 வயது விராட் கோலி ஏற்கனவே முந்தி இருந்தார்.
சச்சினா? விராட் கோலியா?
இந்நிலையில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் சச்சினா? விராட் கோலியா? என்ற விவாதம் அதிகரித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், விராட் கோலியுடன் விளையாடியவர்களும், அவருக்கு எதிராக விளையாடியவர்களும் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், விராட் கோலியை எல்லா நேரத்திற்குமான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக மதிப்பிடுவார்.
அவுஸ்திரேலிய வீரர்களிடம் இருந்து பாராட்டை பெறுவது என்பது மிகவும் கடினமானது, நீங்கள் சச்சினை கடந்து செல்லும் போது விராட் கோலியை எங்கே இருக்கிறார் என்பதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |