ஹூண்டாயின் Year-End Sale சலுகை: ரூ.85,000 வரை தள்ளுபடி
இந்தியாவில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், ஹூண்டாய் நிறுவனம் Year-End Sale சலுகைகளை அறிவித்துள்ளது.
டிசம்பர் 31, 2025 வரை அல்லது ஸ்டாக் இருக்கும் வரை, வாடிக்கையாளர்கள் பல்வேறு மாடல்களில் ரூ.85,000 வரை தள்ளுபடி பெறலாம்.
சலுகை விவரங்கள்
Exter SUV - ரூ.85,000 வரை தள்ளுபடி
Alcazar SUV - ரூ.40,000 வரை தள்ளுபடி
Grand i10 Nios - ரூ.70,000 வரை தள்ளுபடி
i20 Hatchback - ரூ.70,000 வரை தள்ளுபடி
Aura Sedan - ரூ.33,000 வரை தள்ளுபடி
Verna Sedan - ரூ.75,000 வரை தள்ளுபடி

இந்த சலுகைகள் வாடிக்கையாளர் தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் மற்றும் அரசு ஊழியர் தள்ளுபடி, ஸ்க்ராப்பேஜ் போனஸ் ஆகியவற்றை உள்ளடக்கியவை.
மேலும், சமீபத்திய GST விலை குறைப்பு சேர்க்கப்பட்டால், மொத்தம் ரூ.1.74 லட்சம் வரை குறைவான விலையில் கார்களை வாங்கலாம்.
விற்பனை நிலை
ஹூண்டாய், இந்தியாவில் விற்பனை அளவில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 2-வது இடத்தில் இருந்த ஹூண்டாய், தற்போது மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றால் பின்னுக்கு தள்ளப்பட்டது. மாருதி சுசூகி இன்னும் முதலிடத்தில் வலுவாக உள்ளது.
இந்த வருட இறுதி சலுகைகள், வாடிக்கையாளர்களுக்கு புதிய கார் வாங்க சிறந்த வாய்ப்பு அளிக்கின்றன. குறிப்பாக, SUV மற்றும் Sedan பிரிவுகளில் ஹூண்டாய் விற்பனையை மீண்டும் உயர்த்தும் நோக்கில் இந்த சலுகைகள் முக்கிய பங்கு வகிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hyundai India year-end discounts December 2025, Hyundai Exter Alcazar i20 Verna Aura offers, Hyundai Grand i10 Nios hatchback discount sale, Hyundai India festive season car deals Rs 85,000, GST price reduction Hyundai benefits Rs 1.74 lakh, Hyundai India sales ranking fourth in market, Maruti Suzuki Tata Mahindra competition Hyundai, Hyundai dealerships India year-end car promotions, Hyundai sedan SUV hatchback discount breakdown, Hyundai India customer exchange corporate bonus